தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. அதே சமயம் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஒவ்வொரு கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இபிஎஸ் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சித் தாவி வரும் இடையில் தற்போது இபிஎஸ் இன் சொந்த தொகுதியான எடப்பாடியிலையே அதிமுகவினர் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். சேலம் எடப்பாடியில் மாற்றுக் கட்சியினர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக, தேமுதிக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் மாநில அமைப்பு குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் வீரப்பன் மனைவி முத்துலஷ்மி உடன் இருந்தார்.
