தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த விஷ்ணு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகே இருந்த மரக்கிளையில் எனது சாவுக்கு பாபு தான் காரணம் என பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. விஷ்ணு தற்கொலை செய்து கொண்ட பள்ளியில் பாபு என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் பாபுவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது.
இதனை பயன்படுத்தி கடந்த 3 மாதங்களாக விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் விஷ்ணு பாபுவிற்கு ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. விஷ்ணுவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பாபு அவரது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விஷ்ணுவை கண்டித்து இனி விஷ்வால் எந்த தொந்தரவும் வராது என பாபுவிடம் கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் விஷ்ணுவை அவரது அண்ணன் கல்லூரிக்கு செல்லுமாறு பேருந்து நிறுத்தத்தில் விட்டு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்ணு கல்லூரிக்கு செல்லாமல் பாபுவை பழிவாங்க அவர் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
