“ஓசி டிக்கெட்…” பெண்ணிடம் அவதூறு பேச்சு…. கணவரை பார்த்ததும் அந்தர்பல்டி அடித்த ஓட்டுனர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on ஐப்பசி 25, 2025

Spread the love

தமிழக அரசு மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது இந்த நிலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே நிலையம் சந்திப்பிற்கு கடந்த 23-ஆம் தேதி இரவு மகளிர் பேருந்து இயக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பெண் ஏறினார்.

அந்த பெண் இறங்கும் இடத்தில் பேருந்து நிறுத்தாமல் அதைத் தாண்டி சென்று ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஆபாசமாக பேசி ஓசி டிக்கெட் என்று ஓட்டுநர் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. உடனே பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேருந்து நிலையத்திற்கு வரவழைத்தார்.

   

இதனால் கோபமடைந்த பெண்ணின் கணவர் பேருந்து நிலையத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரிடம் கேட்டபோது “நான் தெரியாமல் பேசி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் பெண்ணை அவதூறாக பேசிய ஓட்டுனர் முருகேசனை நெல்லை மண்டல போக்குவரத்து மேலாளர் பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.