“சமையல் செய்யும் பெண்ணுடன் ரகசிய காதல்…” ஆசிரியையை ஏமாற்றிய பள்ளி தாளாளர் மகன்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 25, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் புது விளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகள் ராதிகா(35) வீராரெட்டிகுப்பத்தில் உள்ள மழலையர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி இரவு ராதிகா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராதிகாவின் தற்கொலை காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் ராதிகா வேலை பார்த்த தொடக்கப்பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ் ராஜாவின் மகன் பிரின்ஸ் நவீன்(37) ராதிகாவை காதலித்து தெரியவந்தது. பிரின்ஸ் ராதிகாவை காதலித்த அதே நேரத்தில் அந்த பள்ளியில் சமையலறாக வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அறிந்த ராதிகா பிரின்சை கண்டித்துள்ளார். பின்னர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து பிரின்ஸ் நவீனை போலீசார் கைது செய்தனர்.