மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் 7 வயது சிறுவன் மீது கார் ஏறு இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 7 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஸ்வேதா என்ற பெண் காரை திருப்ப முயற்சித்தபோது அதை எதிர்பாராத விதமாக சிறுவனின் கால் மீது ஏறி இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவனின் கால் உடைந்த நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையின் தாயார் அளித்த புகாரி அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
