திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பேருந்து புறப்பட்டது. அப்போது மது போதையில் வந்த நபர் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுநர் கோபத்தில் அந்த நபரை அடித்து விரட்டினார். அவர் மீது செருப்பை கழற்றி வீசியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போதையில் தகராறு செய்த நபரை அழைத்துச் சென்றனர்.
