தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மலைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி இன்று தாழ்வு பகுதியாக உருவாகிய அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தொடர்ந்து இது மேலும் வலுப்பெறும். 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடிய நிலை உள்ளதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
