பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஆமிர் ஜமால் தனது பிறந்த குழந்தையின் மறைவு குறித்த சோகமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். 29 வயதான கிரிக்கெட் வீரர் தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டு தனது குழந்தையின் இழப்பை உறுதிப்படுத்தினார். இந்த சோகமான செய்தியை ஆமிர் ஜமால் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அமீர் ஜமால் தனது குழந்தையின் சிறிய கை விரலைப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “நீ அல்லாஹ்விடமிருந்து வந்தவன், அல்லாஹ்விடம் சென்றுவிட்டாய்.
“From Allah , to Allah”
I couldn’t hold you longer my lil Angel 👼
Baba&mama will miss you 😢
May you stay on highest ranks in Heaven 😭 pic.twitter.com/j367GOs8VQ— Aamir Jamal (@iaamirjamal) October 22, 2025
என் இனிய தேவதை, உன்னை நீண்ட நேரம் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பாபாவும் அம்மாவும் உன்னை மிகவும் மிஸ் செய்வார்கள். நீ சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து சக கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.
