நாமக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலால் நடந்த ஒரு துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாறை தோட்டம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (37) என்ற கார் மெக்கானிக் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் நாகராஜ் எறையம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்த நிலையில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் நாகராஜ் வீட்டை விட்டு வெளியேறி தனக்கே தனி இடத்தில் தங்கினார். நாகராஜின் கள்ளக்காதலி 15 நாட்களுக்கு முன்பு தன்னுடைய கணவருடன் திரும்பி சென்றதால் மனம் உடைந்த நாகராஜ் பாறை தோட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனே நாகராஜை மீட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளக்காதல் உறவை நம்பி சென்று ஒட்டுமொத்த குடும்பத்தை தொலைத்தது மட்டுமல்லாமல் உயிரையும் மாய்த்துக் கொண்ட இந்த சம்பவம் பெறும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
