அடுத்த அதிர்ச்சி… இனி மனிதர்களுக்கு வேலையே இருக்காது… எலான் மஸ்க் ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

AI டெக்னாலஜி வரவால் பல நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. அமேசான் நிறுவனமும் 2027 ஆம் ஆண்டுக்குள் 1,60,000 பணியாளர்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள எலான் மஸ்க், AI-யும் ரோபோக்களும் இனி எல்லா வேலைகளையும் எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் விரும்பினால் காய்கறிகள் வளர்ப்பது போன்ற வேலைகளை செய்யலாம் என்று அவர் X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏஐ மற்றும் ரோபோக்கள் தற்போதைய வேலைகளை தானாக செய்யும் நிலை உருவாகும் போது, மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.  இந்த பதிவு தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.