கடலூர் மாவட்டம் புவனகிரி ஆதிவராகனந்தம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த அரவிந்த் மற்றும் தமிழேந்தன் ஆகிய இரண்டு இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் புவனகிரியிலிருந்து வீடு திரும்பினர். அப்போது எதிரே சிதம்பரம் நோக்கி நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றுக்கொண்டு வந்த கனராக மோதி இருசக்கர வாகனம் இது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டு அரவிந்த் மற்றும் தமிழேந்தன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டு கதறி எழுதினர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பகுதியில் போக்குவரத்து சீரான நிலையில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
