சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ரூ.186.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 பணி நேரங்களில் பணியாற்றும் 29,455 தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
