தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என மும்முறமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதனுடைய அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம் சமீபத்திய கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட விஜயை தங்கள் பக்கம் எடுக்கும் முயற்சியில் இழுக்கும் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இப்படியான நிலையில் பிரதமர் மோடிக்கு எதிரான தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரியங்கா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு களம் காணும் விஜய், காங்கிரசுடன் ஒரு தேசிய அளவிலான புரிதலுக்கு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எடுத்துள்ள இந்த முடிவை திமுகவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திருப்பதாக கூறப்படுகிறது.
