“ஐயோ குருஜி, வலிக்குது விட்டுருங்க”… மாணவனை கதற கதற கால்களால் உதைத்து அடித்த ஆசிரியர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

பாலியல் மற்றும் உடல் பாதுகாப்பு குறித்த நாடு முழுவதும் எழுச்சியுடன் விழிப்புணர்வு எழுப்பும் தருணத்தில் கர்நாடகாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீ குரு திப்பேஸ்வர சுவாமி கோவிலின் குடியிருப்பு வேத பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக விரேஷ் ஹிரேமட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் தன்னுடைய பாட்டியுடன் தொலைபேசியில் பேச முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. வாக்குவாதம் முடிந்த சில நிமிடத்தில் ஆசிரியர் மாணவரை இழுத்து தரையில் தள்ளியதோடு காலால் உதைத்தும் கைகளால் அடித்தும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர் பயந்தபடி கதறி அழுது குருஜி என்று மன்னிப்பு கோரிய தருணம் காண்போரை கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.