நடுவானில் பறந்த விமானம்…! திடீர் எரிபொருள் கசிவு… பதறிய 166 பயணிகள்…. அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2025

Spread the love

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தின் எரிபொருள் டேங்கில் கசிவு இருப்பதை கவனித்த விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். இதனையடுத்து ஒப்புதல் கிடைத்த பிறகு வாரணாசியில் இருந்து 4.10 மணிக்கு இன்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது.

விமானத்தில் பயணித்த 166 பயணிகளும் வாரணாசி விமான நிலையத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில் அமர வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.