திருப்பூர் மாவட்டத்தில் தன்னுடைய உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததை தங்கி கொள்ள முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரக்குமார் (18) என்பவர் தாராபுரம் அருகே புதிதாக எடுத்த இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் வீரக்குமார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த நண்பன் தனசேகர் (18) துக்கம் தாளாமல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
