விஜய் தனித்துப் போட்டியிட்டால்… “அது அரசியல் தற்கொலை” பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல அதிமுகவினர் விட்ட ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  இதற்கிடையில் விஜயும் போட்டிக்கு வந்துவிட்டார். இதனால் சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில், விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது அரசியல் தற்கொலை என தமிழ்நாடு தன்னுரிமை கழகத் தலைவர் பழ.கருப்பையா விமர்சனம் செய்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “விஜய், பாஜகவுடன் இணைந்தால் அவருடைய பிம்பம் உடைந்துவிடும். ஆனால், பாஜகவை கடந்து அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணியை அமைத்தால், அது தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். விஜய் தனித்துப் போட்டியிட்டால், அது திமுக  வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.