திடீர் திருப்பம்..! பதவியை இழந்த திமுக நகர்மன்ற தலைவி… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறை ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல அதிமுகவினர் விட்ட ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில், திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் உள்ள 23 கவுன்சிலர்கள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததால், நகர்மன்ற தலைவி தன்னுடைய பதவியை இழந்தார். இந்த திடீர் திருப்பத்தின் காரணமாக, திட்டக்குடி நகராட்சி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆளும் கட்சியை சேர்ந்தவரே பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.