BREAKING: கனமழை அலெர்ட்: நீலகிரி சுற்றுலாத் தளங்கள் மூடல்…!!

By Soundarya on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களுமே இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள். மேலும், மழை பெய்துகொண்டே இருப்பதால், மலைப்பாதையில்  சுற்றுலா பயணிகள் ஊர் திரும்புவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விட்டுவிட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.