கனமழை எச்சரிக்கை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… காலையிலேயே பறந்த உத்தரவு…

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரிக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

   

இந்நிலையில் பருவ மழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு மாணவர்கள் மழைக்கோட்டுகள், கொடைகளை எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் சுற்றுச்சூழல் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மேற்கூரைகள் உறுதியாக இருக்கிறதா என ஆய்வு செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.