தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அது புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தலைநகர் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் மழை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
