நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பலவிதமான சேவைகளையும் புதுப்புது திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது பிஎஸ்என்எல் தனது 25வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் ஜூப்ளி பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு தினமும் 2.5 gb டேட்டாவை பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல் அன்லிமிடட் கால், தினமும் 100 sms உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும். ஜியோ, ஏர்டெல், VI உள்ளிட்ட நிறுவனங்களில் தினமும் 2.5GB டேட்டா பெறுவதற்கு 300 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் வெறும் 225 ரூபாய்க்கு தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆப்பரை வழங்குகிறது.
