தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தினார். மேலும் மழையின் தீவிரத்தை கண்காணித்து அக்டோபர் 22 நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து பருவமழை தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே என் நேரு, நேயர்கள் மற்றும் துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
