புதருக்குள் கேட்ட சத்தம்…! அருகே சென்று பார்த்து திகைத்து போன மக்கள்…. போலீஸ் தீவிர விசாரணை…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதருக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை புதருக்குள் வீசி சென்றது யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.