குஷியோ குஷி… தீபாவளி விடுமுறை… புதன்கிழமையும் வந்தது சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

தீபாவளி விடுமுறையை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தற்போது ஊர் திரும்ப ஏதுவாக அக்டோபர் 22 புதன்கிழமையான நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லையிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் அக்டோபர் 23 பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தீபாவளி முடிந்து பொதுமக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.