இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000 கிடைக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on ஐப்பசி 21, 2025

Spread the love

காச நோயாளிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிகளுக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். இதற்கு https://nikshay.in/Home/Index என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

காசநோய் உள்ள நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நோயின் வீரியத்தை எளிதாக்க உதவும் நல்ல சத்தான உணவு, தரமான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை அளித்து அதன் மூலம் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவதே நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.