தமிழகத்தில் அக்டோபர் 20 நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு சார்பில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். தீபாவளிக்கு மறு நாளான அக்டோபர் 21ஆம் தேதி சொந்த ஊர் சென்றவர்கள் அனைவரும் திரும்ப ஏதுவாக அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தீபாவளிக்கு முன்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி முடிந்து பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் புகார் தெரிவிப்பதற்கு 94450 14436 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
