“ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு”… விஜய்யுடன் கூட்டணி சேரும் பிரபல கட்சி… முக்கிய ஆலோசனை…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜயின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறார். NDA கூட்டணியில் இருந்து அவர் விலகிய பிறகு விஜய் உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே TVK கூட்டணி தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளாராம். மேலும் ஜனவரி 7ஆம் தேதி மதுரை மாநாட்டிற்கு முன்னதாக கூட்டணியை அவர் இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது