குஷியோ குஷி… தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

நாடு முழுவதும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் நேற்றைய தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு விட்டனர். இதனிடையே தீபாவளியை கொண்டாடிவிட்டு மீண்டும் திரும்ப ஏதுவாக மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே சனி, ஞாயிறு உட்பட தீபாவளிக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தது. தற்போது அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25 சனிக்கிழமை வேலை நாள் எனவும் அரசு அறிவித்துள்ளது.