DMK அரசு உருட்டு கடை அல்வா தான் தருது… 525 அறிவிப்புகளில் 10% கூட நடக்கல… ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனுடைய சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் தினம் தோறும் காரசாரமான விவாதங்கள் பேரவையில் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான எதிர்க்கட்சியினர் திமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக தாக்குதலை அதிகரித்துள்ளனர். குறிப்பாக ஸ்டாலின் அரசு மக்களின் நலனில் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் திமுக அரசு உருட்டுக்கடை அல்வா வழங்கும் அரசாக மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்க மக்களுக்கு அல்வா வழங்குவது போல நடந்து வருகிறது என்றும் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

   

மேலும் மக்கள் நலனுக்காக திட்டங்களின் செயல் தீவிரம் குறைவாக இருப்பதாகவும் முழுமையான செயலாக்கமே ஒரு அரசின் அடிப்படை கடமையாக இருக்க வேண்டும். மக்கள் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் புதிய நலத்திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மக்கள் நலன் என்ற நோக்கத்தில் அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பது அவசியம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.