திமுக ஆட்சி… செல்லூர் ராஜு பேட்டியால் செம ஷாக்கில் இபிஎஸ்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா…?

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

அதிமுகவின் 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை கேகே நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் வழிமுறை கேட்டில் ஈடுபட்டுள்ளனர். முதல் வரியின் உத்தரவின் பேரில் ஐந்து மண்டல தலைவர்கள், 2 நிலைகுழு தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். மண்டல தலைவர் ராஜினாமா விவகாரத்தை முடிக்க திமுக அரசு திட்டமிட்டது. ஆனால் அதிமுக அளித்த அழுத்தத்தின் காரணமாக மேயர் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் அரசியலில் இப்போது பாடம் படிக்கிறார்கள். அதனுடைய தலைவருக்கு நாங்களும் அறிவுரை கூறினோம். தமிழக வெற்றி கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பங்கேறுகின்றனர். அதிமுக ஆட்சியில் மதுரை காண பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை, திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு கிடையாது. மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை மற்றும் கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகின்றேன். அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரக்கூடிய சூழல் உள்ளது. தேர்தல் காலகட்டத்தில் தான் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் என்று செல்லூர் ராஜு நாசுக்காக விஜய் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார்.