“மண்ணில் உழைத்த விவசாயினா சும்மாவா”… வேர்வை சிந்தி உழைத்த பணத்தில் ரூ.3 கோடியில் புதிய கார் வாங்கிய விவசாயி… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

மண்ணில் உழைத்த உழைப்பின் பலன் எப்போதும் சிறப்பாகவே இருக்கும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு விவசாயின் வெற்றி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விவசாயி ஒருவர் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் காட்சி பதிவாகியுள்ளது. பாரம்பரிய வேட்டி மற்றும் குர்தா அணிந்து ஷோரூம் சென்று தன்னுடைய எளிமையாலும் மனமார்ந்த புன்னகையாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த வீடியோவில் விவசாயி தன்னுடைய குடும்பத்துடன் ஷோரூம் புதிய காரை திறந்து கொண்டாடுகின்றார். அவருடைய மனைவி காருக்கு பொட்டு வைத்து ஆரத்தி எடுக்கிறார். பிறகு விவசாயி காரில் அமர்ந்து சிறு பிரார்த்தனை செய்து அதில் இருக்கும் வசதிகளை ஆராய்கிறார். பிறகு நம்பிக்கையுடன் காரை இயக்கி ஷோரூம் இல் இருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. மண்ணில் உழைத்தவன் உலகத்தையும் மிஞ்சலாம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.