தெலுங்கானா மாநிலம் கர்நூல் மாவட்டம் ஸ்ரீபுரத்தை சேர்ந்த ராமலு (35) என்பவர் பிளம்பர் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு மானசி (35) என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளன. இதனிடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராமலு வீட்டில் நகை திருடு போனது. நகையை திருடியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க மந்திரவாதி சுரேஷ் (27) என்பவரிடம் கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். அங்கு மந்திரவாதி சுரேஷ் பூஜைகள் செய்த போது மானசிக்கும் மந்திரவாதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களுடைய காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்த நிலையில் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்து கட்ட சுரேஷிடம் மானசி கூறியுள்ளார். அதன்படி மானசி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தனது தாய் வீட்டில் உள்ளதால் கணவரை தற்போது கொலை செய்தால் என் மீது சந்தேகம் வராது என்று சுரேஷிடம் கூறியுள்ளார். சுரேஷ் தனது ஊழியரான பாலவீர், மைத்துனர் அனுமந்தூ ஆகியோருக்கு தலா 2.80 லட்சம் கொடுத்து கொலைக்கு திட்டமிட்டனர்.
இந்நிலையில் சுரேஷ் ராமலுவுக்கு போன் செய்து வரவழைத்து அவருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறி மயங்கிய நிலையில் இருந்து அவரின் வாய் மற்றும் மூக்கில் ஸ்டிக்கர் ஒட்டி மூச்சு அடைக்க செய்து கொலை செய்தனர். பிறகு அவர் விபத்தில் இறந்ததாக சித்தரிக்க உடலில் காயங்களை ஏற்படுத்திய சாலையோரம் வீசிவிட்டுச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் அவருடைய உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மனைவி மந்திரவாதியை ஏவி கொன்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
