தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் என்னை நேரிலும் அலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். நான் மருத்துவமனையில் இருந்தபோது அன்புமணி, எனக்கு ஏதாவது நேரிட்டால் தொலைத்து போடுவேன், சும்மா இருக்க மாட்டேன், வேடிக்கை பார்க்க மாட்டேன், என்னை வைத்து நாடகம் ஆடி வருகிறார்கள் என்றெல்லாம் பேசி உள்ளார். படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களை பேசி இருக்க மாட்டார். அதனால்தான் அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று நிர்வாக குழுவில் நான் கூறினேன்.
நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை. அன்புமணியிடம் இருப்பது கட்சி என்று சொல்ல மாட்டேன் அது ஒரு கும்பல் தான். அந்த கும்பலுக்கு சில நாட்கள் அவர் தலைவராக இருப்பார். பாமகவை தோற்றுவித்தது அதன் உரிமையாளரான நான்தான். இப்போது அதே கட்சி மற்றும் அதே கொடியை வைத்து தன்னுடைய கட்சி என்று சொல்வது நியாயம் கிடையாது. இதனை தேர்தல் கமிஷன், நீதிமன்றத்தில் சந்திப்போம். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியாது. பாமகவுக்கும் அன்புமணிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்வதுதான் அவருக்கும் அவரை சுற்றி இருக்கும் கூட்டத்திற்கும் நல்லது. கட்சியில் பொறுப்பு மட்டும்தான் கிடைக்கும், எம் எல் ஏ மற்றும் எம்பி பதவி எல்லாம் கிடைக்காது. அன்புமணி தலைமையை ஒரு போலியான அமைப்பாக தான் மக்கள் பார்க்கின்றனர். என்னுடைய வளர்ப்பு சரியாக உள்ளது என்று நிரூபிக்க வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் புதிய கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம். இதுவரை 8 மாதத்தில் தனிக்கட்சியை தொடங்குமாறு மூன்று முறை சொல்லிவிட்டேன். இனிமேல் என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்று ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
