ஸ்டாலினுக்கு செக்… திமுக + காங்கிரஸ் கூட்டணி… டெல்லி மேலிடம் எடுத்த அதிரடி முடிவு… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் அடம் பிடித்து வரும் நிலையில் நான்கு அமைச்சர் பதவி நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி தமிழகத்தில் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளாராம். அவருடைய தலைமையில் வருகின்ற ஜனவரியில் மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.