தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக முதல் மாவட்டமாக நெல்லைக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அடுத்தடுத்த விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
