தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது கட்சியின் அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்பத்தினரை விஜய் விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சந்திக்காமல் அவர்களை ஒரே இடத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வேலுச்சாமி புரத்திற்கு பேருந்துகளில் அழைத்து வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
