சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு விரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். பிறகு வெடிகுண்டு மிரட்டல் வந்தது வெறும் வதந்தி என தெரிய வந்தது. முதல்வர் ஸ்டாலின், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து இந்த செய்தி வந்து கொண்டு இருப்பது பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
