நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது அக்டோபர் 20ஆம் தேதி அன்று காலை 6 மணி முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. குறைந்த ஒலி மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
