கறி குழம்பு வைப்பதில் தகராறு… மனைவி, குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டு வந்த கணவர்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2025

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா(38). இவரது மனைவி முத்துலட்சுமி(27). இந்த தம்பதியினருக்கு முத்தமிழ்(4 1/2), சுசிலா தேவி(3) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். முத்தையா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலை முத்தையா கறி குழம்பு வைக்க சொன்னதால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனால் முத்தையா தனது மனைவி மற்றும் மகள்களை மாமியார் வீட்டில் விட்டு வந்தார். பின்னர் இரவு மீண்டும் மது குடித்துவிட்டு அங்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துலட்சுமி நேற்று காலை தனது இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

   

இதற்கிடையே முத்துலட்சுமியின் தாய் லட்சுமி தனது மகள் மற்றும் பேர பிள்ளைகளை தேடி பார்த்த போது மூன்று பேரின் உடல்களும் கிணற்றில் மிதந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.