நகை கடன் வாங்குபவர்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நகை கடன் வாங்குபவர்கள் இனி அசல் மற்றும் வட்டியை 12 மாதங்களுக்குள் முழுயாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முன்பு இருந்த வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைப் போலவே கடனை செலுத்திய உடன் ஏழு வேலை நாட்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை கடன் கொடுத்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன்பு உரிமையாளர்களிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏலத்தின் இருப்பு விலை நகையின் மதிப்பில் 90 சதவீதம் இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85 சதவீதமாக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை ஏழு நாட்களுக்குள் கடன் வாங்கிய அவரிடம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
