ஸ்டாலினுக்கு செம ஷாக்… கொத்தாக 125 தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 14, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதை இடையே தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைபாட்டில் உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கல் ஆக மாறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 125 தொகுதிகளை குறி வைத்து நாம் பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவிடம் காங்கிரஸ் 125 தொகுதிகளை கேட்க நினைக்கிறது என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அனைவரின் தொகுதிகளையும் சேர்த்துதான் அப்படி சொல்லப்பட்டதாக செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் கூடுதல் தொகுதிகள் கேட்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது.