கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் 16வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து தவெக கட்சி அலுவலகத்தின் வெளியே நுழைவு வாசலில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அதன் கீழே உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் எடுப்போம் என்று அருகில் எழுதப்பட்டுள்ளது. பலியானவர்களின் பெயர்களோடு மெழுகுவர்த்தி எரிவது போன்றும், புகைப்படம் இல்லாதவர்களின் இடங்களில் பூக்கூடையும் இடம் பெற்றுள்ளது.
