மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 21 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் இரண்டு அதிகாரிகளை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது. தற்போது தமிழக முழுவதும் சோதனை நடைபெற்ற வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
