திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு… இனி ஒரு சீட் கூட இல்ல… செம ஷாக்…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துள்ளதால் இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைபாட்டில் செயல்பட்டு வருகிறது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகிறார்.

இப்படியான நிலையில் வாணியம்பாடியை கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் கட்சியிடம் இருந்து பறிக்க திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. திருப்பத்தூரில் வாணியம்பாடியில் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அதனாலயே முஸ்லிம் லீக் கட்சிக்கு அது ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி திமுக இந்த முடிவை எடுத்தால் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும் எனவும் கூறப்படுகிறது.