பெற்றோர்களே..! RTE மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க போறீங்களா..? பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு..!!

By Soundarya on ஐப்பசி 6, 2025

Spread the love

பள்ளிகள் வாயிலாக மட்டுமே RTE மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை தொிவித்துள்ளது . அதாவது ஒவ்வொரு வருடமும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான RTE கட்டணத்தை விடுவிக்காமல் இருந்தது. இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. இப்படியான நிலையில் தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் வாயிலாக மட்டுமே RTE மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை தொிவித்துள்ளது. தற்போது இணையதளம் வாயிலாக RTE மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.