தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சுமார் 1400 ரூபாய் அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்த நிலையில் மாலையில் 520 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,125- க்கும், ஒரு சவரன் 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் 30,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
