கரூர் துயர சம்பவத்தில் “தமிழக அரசு செய்த 5 தவறுகள்” லிஸ்ட் போட்டு சொன்ன பிரேமலதா…!!

By Soundarya on ஐப்பசி 6, 2025

Spread the love

விஜய் பரப்புரையில் 41பேர் பலியான சம்பவத்தில் தமிழக அரசின் தவறுகளை பட்டியலிட்டு பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார். அதாவது, “கரூரில் குறுகலான சாலையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதித்தது முதல் தவறு. விஜய் பிரச்சார கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுமதித்தது 2-வது தவறு.

கரூரில் விஜய் பரப்புரையின்போது செருப்பு வீசிய நபரை அரசு இதுவரை கைது செய்யாதது ஏன்? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையே இல்லை. யார் மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியே வரும் கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசும், தவெகவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.