வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் பெர்னார்ட் ஜூலியன் (75) காலமானார். கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இவரை பார்த்தே அலரும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 24 டெஸ்டுகளில் விளையாடி சுமார் 866 ரன்கள் குவித்து 56 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 12 ஒரு நாள் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
