சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அதிகாலையில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் நந்தனம் விரிவாகத்தில் உள்ள ஹைகோர்ட் வழக்கறிஞர் மாலினி கணேஷ் (நடிகை சொர்ணமால்யாவின் தாயார்) வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் நந்தனம் பகுதிக்கு சென்று விசாரித்த போது சொர்ணமால்யா குடும்பத்தினர் மூன்று வருடங்களுக்கு முன்பாக வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு ஆழ்வார்பேட்டையில் மற்றொரு வீட்டில் குடியேறிய உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இது புரளி என தகவல் வெளியாகி உள்ளது.
